கோவிலில் அர்ச்சனைக்காக உடைக்கப்படும் தேங்காயில் நிறைய குறியடுகள் இருக்கின்றன. அதை வைத்து நல்லது நடக்குமா கெட்டது நடக்குமா என்றும் தெரிந்து கொள்வார்கள். அப்படி உடைக்கப்படும் தேங்காய் எப்படியிருந்தால் என்ன பயன் என்பது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
பொதுவாக நாம் எல்லோரும் கோவிலுக்குப் போகின்ற பொழுது, முதலில் வாங்குவது அர்ச்சனைப் பொருள்கள் தான். குறிப்பாக, பூ, கற்பூரம், தேங்காய், பழங்கள் தான். அதில் மற்ற தேங்காயைத் தவிர மற்ற எல்லா பொருள்களையும் மேலிருந்தே பார்த்து நலல்லதா வாங்கி விட முடியும். ஆனால் தேங்காயை மட்டும் அப்படி பார்த்து வாங்க முடியாது. தேங்காய் உள்ளுக்குள் எப்படி வேண்டுமானாலும் இருக்கும். நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தால், முற்றிய தேங்காயா இல்லை இளம் தேங்காயா என்று மட்டும் கண்டுபிடித்து, நன்கு முற்றிய நல்ல தேங்காயாகப் பார்த்து வாங்குவார்கள். அதைத்தாண்டி கொப்பரையாக இருக்கிறதோ அல்லது பூ விழுந்திருக்கிறதோ என்பது பற்றி கண்டுபிடிக்கத் தெரியாது.
பூஜை தேங்காய்
அப்படி பூஜை தேங்காயில் பூ விழுந்தாலோ அல்லது அழுகி இருந்தாலோ அது அபசகுனம் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. ஆனால் சாஸ்திரப்படி எது நல்லது, எது அபசகுனம் என விளக்கமாகத் தெரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல, கடவுளுக்கு அர்ச்சனை செய்கின்ற பொழுது, ஏன் தேங்காயை உடைக்கிறோம் என்ற தாத்பர்யம் தெரியுமா உங்களுக்கு? அதையும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.