இந்த 5 பொருள்ல ஏதாவது ஒன்னு வீட்ல வாங்கி வெச்சா வீட்ல காசுமழை கொட்டும்ங்கிறது ஐதீகம்..
வாஸ்து சாஸ்திரம் என்பது வெறுமனே கட்டடங்கள் கட்டுவதற்கான விஷயம் மட்டுமல்ல. வீடு மற்றும் நாம் வாழும் பகுதியைச் சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல்களைக் களைந்து, நமக்கு நேர்மறையான நல்ல பலன்களைக் கொடுப்பது.

 


​அதிர்ஷ்டப் பொருட்கள்



வாஸ்து என்பதற்கு வாழும் இடம் என்பது பொருள். இயற்கை சக்திகளான பஞ்ச பூத சக்திகளைச் சமநிலைப்படுத்தி, நாம் வாழும் வீட்டுக்குள் துன்பங்கள் நீங்கி, வளம் பெருகுவதற்கான முறைகளையே வாஸ்து சாஸ்திரம் என்கிறோம்.


வீட்டில் வளம் பெருகுவதற்காக சில செடிகளை நட்டு வைப்பதுண்டு. வீட்டில் உள்ள பொருட்களை, சரியான இடத்தில் சரியான திசையில் வைப்பது போன்றவற்றின் மூலம் வாஸ்து பிரச்னைகளை சரிசெய்து கொள்ள முடியும். அதேபோன்று சில பொருட்களை வீட்டுக்குள் வைப்பதன் மூலம், நாம் வாழுமிடத்தில் அஷ்ட லட்சுமிகளையும் நம்முடன் சேர்த்து வசிக்கச் செய்ய முடியும் என்று நம்பப்படுகிறது.



 


​குபேரன் சிலை



குபேரன் சிலை வீட்டில் மட்டுமல்லாது தொழில் செய்யும் இடத்திலும் வைத்திருத்தல் வேண்டும். அது தொழிலில் லாபத்தைக் கொடுக்கக்கூடியது. குபேரன் சிலையை எப்போதும் வீட்டில் வடக்கு திசை பார்த்து வைத்திருக்க வேண்டும். இது பொதுவாக எல்லோருக்கும் நன்கு தெரிந்த விஷயம் தான். அதனால் தான் விதவிதமாக குபேரன் சிலையை வாங்கி வைத்திருப்பார்கள். அதிலும் பணமூட்டையுடன் இருக்கும் குபேரன் அதிக நன்மைகளைத் தருவார்.



 


​புல்லாங்குழல்



பாரம்பரிய இசைக்கருவிகளில் ஒன்றான புல்லாங்குழல், மனதுக்கு இனிமையான இசையைக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், வீட்டுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கிறது. புல்லாங்குழலை வீட்டில் வைத்திருப்பதால், பொருளாதாரக் கஷ்டங்கள் தீரும். வீட்டில் லட்சுமிதேவி குடிகொண்டிருப்பாள். அதோடு வீட்டில் இருக்கும் அத்தனை வாஸ்து தோஷங்களையும் தீர்க்கவல்ல சக்திகளையுடையது புல்லாங்குழல். ஆனால் பொதுவாக புல்லாங்குழலை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. அது சோகத்தை வாசிக்கும் ஒரு கருவி என்று சிலர் சொல்வார்கள். அப்படியெல்லாம் கிடையாது. தாராளமாக நீங்கள் உங்களுடைய பூஜை அறையில், வாங்கி வைக்கலாம்.