திருச்சி மாவட்டத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் 4 பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் நடந்து முடித்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என விஜயை மேற்கோள் காட்டி இயக்க வாலிபர்கள் பலரும் விஜய்யிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதற்கு மறுத்த விஜய், மக்கள் நலப்பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என்று ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.