ஈடன் கார்டன் மைதானத்தை அரசிடம் ஒப்படைக்க தயார்: கங்குலி

கோல்கட்டா: கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையில், நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள அறைகளை, மேற்கு வங்க மாநில அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக கங்குலி கூறுகையில், நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஈடன் கார்டன் மைதானத்தை அரசு கேட்டால், நாங்கள் நிச்சயம் அதனை ஒப்படைப்போம். இந்த நேரத்தில் எது தேவையோ அதனை செய்வதற்கு தயாராக உள்ளோம். இதில் எந்தவித பிரச்னையும் இல்லை. இந்த நேரத்தில், மக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும். இவ்வாறு கங்குலி கூறினார்.